in

பணியின் போது உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழுங்க வீரவணக்கம்

பணியின் போது உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழுங்க வீரவணக்கம்

 

புதுச்சேரியில் பணியின் போது உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழுங்க வீரவணக்கம். முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மலர் வளையம் வைத்து மரியாதை

நாடு முழுவதும் பணியின் போது உயிர்களை தியாகம் செய்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி.ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் நாள் காவலர் வீரவணக்க நாளாக (Police Commemoration Day) அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானத்தில் உள்ள காவலர் நினைவு தூணிற்க்கு முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் டிஜிபி உட்பட்ட காவல்துறை உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் நடைபெற்ற காவலர் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டனர்.தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க உயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

நிறைவாக பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் நினைவாக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து உயிர் நீத்த காவலரின் குடும்பங்கள் கண்ணீர் மல்க மலர் தூவி மரியாதை செலுத்தினர்…

What do you think?

தீபாவளி பண்டிகையையொட்டி களைகட்டிய சண்டே மார்க்கெட் வியாபாரம்

அறிவியல் மற்றும் பல்திறன் கண்காட்சி பிரம்மாண்டமாக விண்கலம் அரங்கம்