in

தமிழக அரசு உரிய நிவாரணம் கணக்கெடுப்பு செய்து வழங்குவதில்லை  கே பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழக அரசு உரிய நிவாரணம் கணக்கெடுப்பு செய்து வழங்குவதில்லை  கே பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

 

இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கும் வெள்ள நிவாரணத்திற்கும் தமிழக அரசு உரிய நிவாரணம் கணக்கெடுப்பு செய்து வழங்குவதில்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு, தமிழகத்தில் மதிப்பூதியம் தொகுப்பூதியத்தில் புதிய பணியிடங்கள் நிரப்பப்படுவதால் இளைஞர்களின் எதிர்காலம் பாலைவனம் ஆகிவிடும் என்று குற்றச்சாட்டு.

சென்னையில் பெருவெள்ளம் மழை ஏற்பட்டபோது முதலமைச்சர் துணை முதலமைச்சர் அமைச்சர்கள் களத்தில் நின்று பொதுமக்களை காத்து நின்றதை நாங்கள் பாராட்டுகின்றோம் அதே நேரத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் போது பாதிக்கப்பட்ட நெல் கரும்பு வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு முறையான கணக்கெடுப்பு நடத்தி முறையான நிவாரணம் வழங்காத நிலைமை காணப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

தமிழகம் பாதிக்கப்படும் பொழுது மத்திய அரசு அதற்கு உரிய நிவாரணம் கொடுக்காமல் வஞ்சிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்து வருகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க முடியாது நிலைமை உள்ளது.

மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். தமிழகத்திற்கு துரோகம் செய்துவரும் ஆளுநரை மாற்றாமல் உள்ளது மத்திய அரசு. அவரது பதவி காலம் முடிந்த பின்னும் இன்னும் ஆளுநரை மாற்ற யோசித்து வருவது கண்டிக்கத்தக்கது, தமிழ்நாடு மட்டுமல்ல எந்த ஒரு மாநிலத்திற்கும் ஆளுநர் பதவி என்பது தேவையற்றது. பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் போட்டி சர்க்கார் நடத்துகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்தை திருத்தி பாடும் அதிகாரம் யாருக்கும் இல்லை. ஆளுநர் பாட சொன்னாரா இல்லையா என்பது பிரச்சனை இல்லை ஆனால் தவறாக பாடும் பொழுது யாராவது அதை தலையிட்டு சரி செய்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பணியமரத்தக்கூடிய லட்சக்கணக்கான இளைஞர்கள் மதிப்பூதியம் தொகுப்பூதியம் என்ற பெயரிலேயே பணியமர்த்தப்படுகிறார்கள். இதனால் பணி பாதுகாப்பின்றி சம்பள பாதுகாப்பின்றி மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிகின்றனர்.

இதனால் ஒரு வறட்சியான வறுமை நிறைந்த மாநிலமாக எதிர்காலத்தில் தமிழகத்தை மாற்றிவிடும், எனவே தொகுப்பூதியம் மதிப்பூதியத்தில் வேலை செய்யும் அனைவரையும் கால வரைமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குற்றவாளிகள் பாஜகவில் இணைந்தால் அவர்கள் ஊழல்கள் மன்னிக்கப்பட்டு மறக்கப்பட்டு விடுகின்றன. தேர்தல் கமிஷனை பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறது. சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற குற்றச்சாட்டுகளும் இதையே எடுத்துக் கூறுகின்றன என்று கூறினார்.

What do you think?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தை  உறுப்பினர் பிரகாஷ்காரத் திறந்து வைத்தார்

இந்தியா கூட்டனி பலமான எதிர்கட்சியாக உள்ளதால் பா.ஜ.க ஆட்சி தினிக்க நினைக்கின்ற பிரகாஷ்காரத் பேச்சு