in

இந்தியா கூட்டனி பலமான எதிர்கட்சியாக உள்ளதால் பா.ஜ.க ஆட்சி தினிக்க நினைக்கின்ற பிரகாஷ்காரத் பேச்சு

இந்தியா கூட்டனி பலமான எதிர்கட்சியாக உள்ளதால் பா.ஜ.க ஆட்சி தினிக்க நினைக்கின்ற பிரகாஷ்காரத் பேச்சு

 

இந்தியா கூட்டனி பலமான எதிர்கட்சியாக உள்ளதால் பா.ஜ.க ஆட்சி தினிக்க நினைக்கின்ற R.S.S. சிந்தாந்தம் செயல்படுத்த முடியவில்லை என சி.பி.ஐ (எம்) மூத்த தலைவர் பிரகாஷ்காரத் பேச்சு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சிபிஐ (எம்) முதுபெரும் தலைவர் பாரதி மோகன் பெயரில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அலுவலக கட்டிடத்தை அக்கட்சியின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான பொது குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் நேற்று திறந்துவைத்தார்.

பின் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய அவர் பா.ஜா.க அரசு தற்போது மைனாரிட்டி அரசாக செயல்பட்டாலும், R.S.S. சித்தாந்தமான ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்கிற சித்தாந்தில் செயல்பட்டு வருகிறது அதனால்தான் இன்று, மத்தியில் இந்தியா கூட்டணி பலமான எதிர்கட்சியாக உள்ளதால் அவர்களது என்னங்கள் ஈடேறவில்லை என்றும் இந்தியாவை அதானிக்கும் அம்பானிக்கும் தாரை வார்க்க தான் மோடி ஆட்சி இருப்பதாகவும் பேசினார். இக்கூட்டத்தில் அக்கட்சியின் பொறுப்பாளர்கள் மகளிர் அணியினர் தொண்டர்கள் ஏராளமானோர் திரளாக பங்கேற்றனர்.

What do you think?

தமிழக அரசு உரிய நிவாரணம் கணக்கெடுப்பு செய்து வழங்குவதில்லை  கே பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

வாய்க்காலில் மீன் பிடிக்க வலை வீசியபோது சிக்கிய முதலை குட்டி