in

உயிரைக் கொடுத்தாவது திருமாவளவனை முதல்வராக்குவேன் என்ற சீமான் பேச்சுக்கு நாகையில் நன்றி தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்

உயிரைக் கொடுத்தாவது திருமாவளவனை முதல்வராக்குவேன் என்ற சீமான் பேச்சுக்கு நாகையில் நன்றி தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்: உயிரைக் கொடுக்காமலே திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சி எடுக்கட்டும் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என கருத்து

நாகை மாவட்டம் திருமருகல் அடுத்த சீயத்தமங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி பொன்னுசாமியின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் பங்கேற்று பொன்னுசாமியின் திருவுருவ சிலையை திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்..

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக எம்பிகள் தமிழகத்திற்கு நன்மை செய்வதற்கு எந்த குரலும் கொடுக்க வில்லை என்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், தமிழகத்தின் 40 எம்பிக்களும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், நிதிக்காக தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே தமிழக எம்பிக்கள் மீதான தவறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றவர்,உயிரைக் கொடுத்தாவது திருமாவளவனை முதல்வராக்குவேன் என்ற சீமான் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலிளித்தவர் சீமானுக்கு நன்றி தெரிவித்த அவர் உயிரைக் கொடுக்காமலே திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சி எடுக்க வேண்டும். எனவும் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முதலமைச்சர் துணை முதலமைச்சர் துணை பிரதமர் பிரதமர் என்று சொல்லிக் கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.என்றவர் தமிழ் தாய் வாழ்த்தை மாற்றுவேன் என்ற சீமான் பேச்சுக்கு, ஆட்சிக்கு வந்த பிறகு மாற்றுவது என்பதை விட தற்பொழுது தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடும்போது அதை மதிக்க வேண்டும். அதனை சிறுமைப்படுத்த கூடாது.

தமிழர் என்ற முறையில் சீமானும் அதைக் கண்டிக்க வேண்டும். என்றவர், தமிழகத்தில் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் மத்திய அரசுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் காப்பீடு திட்டம் தனியாரிடம் நீடிக்க கூடாது எனவும், அரசே காப்பீட்டு நிறுவனத்தை ஏற்று நடத்த வேண்டும் எனவும், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கு முழுமையான நிதி ஒதுக்கி அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்
இந்நிகழ்வில் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் பழனிச்சாமி, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

What do you think?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு வருகிற 2025 ஏப்ரல் 2 முதல் 6 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கான வரவேற்புக்குழு

நண்பருடைய பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற இடத்தில் நாயை விரட்டிச் சென்று மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி.