துறையூர் பேருந்து நிலையத்திற்குள் இடிந்து விழுந்த மேற்கூரையால் பரபரப்பு துறையூர் பேருந்து நிலையத்தில்கடை எண் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் இளைஞர் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையத்திற்குள் சுமார் 42 கடைகள் உள்ளன துறையூர் நகராட்சிக்குட்பட்ட கடைகளுடன் கூடிய பேருந்து நிலையம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்புஅப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு,பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது என தெரிய வருகிறது.தற்போது பேருந்து நிலையத்திற்குள் உள்ள கடைகளின் மேற்கூரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதும், தற்காலிகமாக நகராட்சி நிர்வாகம் அதனை சரி செய்து கொடுப்பதுமாகஇருந்து வந்த நிலையில் இன்று காலை பேருந்து நிலையத்திற்குள் உள்ள ஒரு சலூன் கடையின்வெளிப்புற மேற்கூரை அதிக அளவில் பெயர்ந்து கீழே விழுந்தது
இதில் கடை வாசலில் சலூனில் வேலை பார்க்கும் ரவிக்குமார் என்பவர்நாற்காலியில் உட்கார்ந்து இருந்த அவரது தலையில் தலையில் திடீரென சிமெண்ட் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் காயம் ஏற்பட்டது உடனடியாக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை செய்தனர்
மேலும் அவ்வலியாக குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் என பலரும் வந்து செல்லும் இடத்தில் இத்தகைய நிகழ்வு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதே போன்று பேருந்து நிலையத்திற்குள் உள்ள பல கடைகளில் சிமெண்ட் கூரைகள் பெயர்ந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால் பலரும் அச்சத்திலேயே இருந்து வரும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
மேலும் அடிக்கடி இத்தகைய விபத்துக்கள் பேருந்து நிலைய கடைகளில் ஏற்படுவதால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.