in

ஆகாயத்தாமரையின் பிடியில் உள்ள திண்டிவனம் கிடங்கல் ஏரியை மீட்க  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஆகாயத்தாமரையின் பிடியில் உள்ள திண்டிவனம் கிடங்கல் ஏரியை மீட்க  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

ஆகாயத்தாமரையின் பிடியில் உள்ள திண்டிவனம் கிடங்கல் ஏரியை மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை .

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் நகரின் மைய பகுதியில் இந்திராகாந்தி பஸ் நிலையம் பின்புறம் கிடங்கல் ஏரி அமைந்துள்ளது. இது திண்டிவனம் ஏரி, காவேரிப்பாக்கம் ஏரி, முருங்கப்பாக்கம் ஏரி ஆகியவற்றை விட பரப்பளவில் பெரியது.

நகரின் மொத்த பரப்பளவான 1,800 ஏக்கரில் கிடங்கல் ஏரியின் பரப்பளவு 975 ஏக்கர் ஆகும். கிடங்கல் ஏரியின் மூலம் 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.கிடங்கல் ஏரியின் உபரி நீர் விவசாய பாசனத்திற்கு பிறகு, 50 கி.மீ., துாரம் சென்று மரக்காணம் அருகே கழுவெளியை அடைந்து கடலில் கலக்கிறது.

கிடங்கல் ஏரியின் உபரி வாய்க்கால், ஒரு பக்கம் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, கிடங்கல் ஏரியின் பெரும் பகுதி, ஆகாயத்தாமரையால் சூழப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இதனால் ஏரியை நம்பி பாசனம் பெரும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஏரியின் கரையில் அமைந்துள்ள நடைபாதை சரி செய்து பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு நடைபாதை பூங்கா அமைத்து தர வேண்டும் என்றும் மற்றும் ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற பொதுப்பணித் துறையினர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திண்டிவனம் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

What do you think?

அமலாக்கத்துறை சோதனையால் வைத்திலிங்கத்திடம் விசாரணை வீட்டின் முன்பு குவிந்த ஆதரவாளர்கள்

அருள்மிகு சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவிலுக்குள் குளம் போல் தேங்கிய மழை வெள்ளம்