கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து, மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நியாய விலை கடை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் கிராமப்புற அங்காடிகள் வேலைநிறுத்தம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் சேவை பாதிப்பு
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விற்பனையாளர்களிடம் இரு மடங்கு அபராத தொகை வசூலிப்பதை நிறுத்த கோரியும், நியாய விலை கடைகளில் பொருட்களை அதிகமாக இறக்கி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும் என்று கூறியும், நியாய விலை கடை விற்பனையாளர்களை சொந்த மாவட்டத்திலும் குறைந்தது 10 கிலோமீட்டர் தூரத்திற்கு குடும்பம் உள்ள ஒன்றியத்தில் மாற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியும், கோரிக்கைகள் நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று மூன்றாவது நாளாக பணியாளர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 21 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் வேலைநிறுத்தம் காரணமாக மாவட்டம் முழுவதும் கூட்டுறவு வங்கிகள் மூடப்பட்டுள்ளன. கிராமப்புற ரேஷன் அங்காடிகள் அடைக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக பொதுமக்கள் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தரங்கம்பாடி அருகே திருவிளையாட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.