in

“டானா” புயல் காரணமாக நாகை உள்ளிட்ட 9 துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

மத்திய கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள “டானா” புயல் காரணமாக நாகை உள்ளிட்ட 9 துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது இந்நிலையில் இன்று கிழக்கு மத்திய வங்கக் கடலில் “டானா” என பெயரிடப்பட்டுள்ள புயல் தீவிர புயலாக வலுப்பெற்று, 24ஆம் தேதி இரவு மற்றும் 25ஆம் தேதி காலை பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, கடலூர், எண்ணூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது இந்த நிலையில் புயல் உருவாகி உள்ளது என்பதை குறிக்கும் வகையில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு 9 துறைமுகங்கள் ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

நியாய விலை கடை பணியாளர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக பணி புறக்கணித்து போராட்டம்

டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக ராஜபாளையத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டடத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஆய்வு