in

இலவச அனுமதி வழங்க வேண்டி செஞ்சி நகர வியாபாரிகள் ஊர்வலம்

இலவச அனுமதி வழங்க வேண்டி செஞ்சி நகர வியாபாரிகள் ஊர்வலம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நங்கிலிகொண்டான் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள  திண்டிவனம், திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் வணிகர்கள் மற்றும் செஞ்சி நகர பொது மக்களின் வாகனங்கள்  இலவசமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என ஊர்வலமாக சென்று செஞ்சி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரே இருந்து புறப்பட்ட ஊர்வலம் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது. பின்னர் செஞ்சி வட்டாட்சியர் ஏழுமலையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனுவின் விபரம். செஞ்சி அருகே நங்கிலிகொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சவாடியில் ஒரு முறை கட்டணமாக ரூ 60 வசூலிக்கப்படுகிறது. செஞ்சியை சுற்றிலும் கிராமங்கள் உள்ளது. இக் கிராமங்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள் இந்த சுங்கச்சாவடி வழியாகத்தான் செஞ்சி வரவேண்டும். மிக குறுகிய தூரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் கிராம மக்கள் பெரும் பொருளாதர இழப்புக்கு உள்ளாகின்றனர்.

மேலும் செஞ்சியில் இருந்து இந்த சுங்கச்சாவடி 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இதனால் செஞ்சி பகுதியை சேர்ந்த வியாபாரிகள், காய்கறி, பழங்களை மினி வேன்களில் விற்கும் சிறு வியாபாரிகள், செஞ்சி நகர பொது மக்கள் உள்ளிட்டோர் கட்டணம் செலுத்தி செல்வதால் பெரும் இன்னல்களுக்கும், பொருளாதர இழப்பிற்கும் உள்ளாகின்றனர்.

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்தபடி சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ.தூரம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை கொண்டு இலவசமாக செல்லலாம் என்ற அனுமதியை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை அடங்கிய மனுவை வியாபாரிகள் அனைவரும் செஞ்சி வட்டாட்சியரிடம் மனுவாக அளித்தனர்.

கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் ஏழுமலை தேசிய நெடுஞ்சாலை துறையினரை தொடர்பு கொண்டு இத் தகவலை தெரிவித்து பேசுவதாக தெரிவித்தார்.

பேரணியில் செஞ்சி சேம்பர் ஆப் காமர்ஸ், செஞ்சி நகர வணிகர் பேரவை, வர்த்தகர்சங்கம், கார், வேன் உரிமையாளர்கள் சங்கம், நெல், அரிசி, மணிலா வியாபாரிகள் சங்கம் மற்றும் செஞ்சியில் உள்ள, நகை கடை, ஜவுளி கடை உள்ளிட்ட பல்வேறு வணிக சங்கங்களின் நிர்வாகிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

What do you think?

செஞ்சி பகுதியில் தொடர் நள்ளிரவு திருட்டு.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் பயிற்சி