கண் பார்வை…இல்லாத பெற்றோரின் குழந்தையை தத்து எடுத்த இமான்
இசையமைப்பாளர் டி. இமான் மீண்டும் தந்தையானார். தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் டி. இமான், மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டவர் 13 ஆண்டுகளுக்கு பிறகு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.
இவர்களுக்கு Blessica Kathy Imman, Veronica Dorothy Imman ..இன்னு இரண்டு குழந்தைகள் உண்டு. டி. இமான் தனது முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட்டை பிரிவதற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் , siva ஒரு துரோகி என்று இமான் கருத்து வெளியிட்டார்.
அதன் பிறகு இமான் எமிலி ..என்பவரை 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். எமிலி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில்.
தற்போது ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்திருகிறார்கள். கண் பார்வை அற்ற பாலு மற்றும் அவரது மனைவி ஷீபா …வின் இரண்டாவது பெண் குழந்தையை அவர்களின் சம்மதத்தோடு தத்தெடுத்திருக்கிறார்கள்.
இரண்டாவது குழந்தையின் பிறந்த நாளுக்கு சென்றவர்கள் பார்வை இல்லாமல் இவர்களால் எப்படி குழந்தையை வளர்க்க முடியும் என்று நினைத்து இரு குழந்தைகளின் படிப்பு மற்றும் பராமரிப்பு செலவு அனைத்தையும் ஏற்றுகொண்டு …ஒரு குழந்தையை தத்தெடுத்திருக்கிறார்கள்.
இமானின் இளகிய மனதை பார்த்து ரசிகர்கள் இமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. இவர் ஏற்கனவே நெய்வேலியில் கஷ்டப்பட்ட நரிக்குறவருக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்.