in

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கான சாலை பாதுகாப்பு பயிற்சி முகாம்

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கான சாலை பாதுகாப்பு பயிற்சி முகாம்…

200க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பங்கேற்பு…

திருவண்ணாமலை வேங்கிக்கால் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை பொறியாளர்களுக்கான சாலை பாதுகாப்பு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.

எக்கோரிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமினை திருவண்ணாமலை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை வட்டம் மற்றும் விழுப்புரம் வட்டங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளை எவ்வாறு மதிப்பீடு செய்வது?, சாலையில் உள்ள குறைகளை எவ்வாறு கண்டறிந்து தீர்வு ஏற்படுத்துவது, சாலை பாதுகாப்பு குறித்தும், போக்குவரத்து நெரிசலை எவ்வாறு கட்டுப்படுத்துவது, பாதுகாப்பான சாலையை எவ்வாறு உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் பொறியாளர்களுக்கு விவரமாக எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக காஞ்சிபுரத்தில் இது போன்ற பயிற்சி முகாம் நடைபெற்ற நிலையில் தமிழ்நாட்டில் இரண்டாவதாக திருவண்ணாமலையில் இன்று இந்த பயிற்சி முகாம் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு நடத்தப்பட்டது.

What do you think?

அந்த வீட்டில் குடும்பம் நடத்த முடியாது… சோபிதா துலிபாலா Marriage Condition

புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச பேட்டி சேலைக்கு பதிலாக 1000 ரூபாய் பணம் வழங்கும் திட்டம்