in

புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச பேட்டி சேலைக்கு பதிலாக 1000 ரூபாய் பணம் வழங்கும் திட்டம்

புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச பேட்டி சேலைக்கு பதிலாக 1000 ரூபாய் பணம் வழங்கும் திட்டம் முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

எஸ்சி,எஸ்டி மக்களுக்கு தொடர்ந்து அரசு பல்வேறு திட்டங்கள் அறிவித்து வருகிறது என்று முதலமைச்சர் எதிரில் புகழ்ந்து திட்டங்களை அணிவகுத்து பேசிய அமைச்சரால் முதலமைச்சர் ரங்கசாமி பூரிப்பு.

புதுச்சேரியில் நலிவடைந்த ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவி தொகை ஆதி திராவிட மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஏழை ஆதிராவிட பழங்குடியின மணமகளுக்கு திருமண உதவி, ஏழை அட்டவணை பழங்குடியின கருவுற்ற மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கு நிதி உதவி,தொடர்நோயினால் துன்புறுபவர்களுக்கு நிதி உதவி, இலவச வேட்டி சேலைக்கு பதிலாக பணம் வழங்குதல்,கலப்புத்திருமண நிதி உதவி,ஈமச்சடங்கு செய்யநிதி உதவி,அட்டவணை வகுப்பினர் பழங்குடியினவன் வன்கொடுமை தடுப்பு சட்டம்,பிரதமமந்திரி ஆவாஸ் யோஜனா/ பாரதரத்னா ராஜீவ்காந்தி வீடு கட்டும் திட்டம்,தீ விபத்து மற்றும் எதிர்பாராத விபத்தில் ஏற்படும் மரணத்திற்க்கு நிதி உதவி,சுகாதார கழிவறை கட்டுவதற்கான நிதயுதவி,கல்வி மேம்பாடுகள், பயிற்சி மற்றும் சுயதொழில்களுக்கான திட்டம், இந்த அணைத்து திட்டங்களும் இத்துறையில் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.

அதில் முக்கிய திட்டமான இலவச வேட்டி சேலைக்கு பதிலாக பணம் வழங்கும் திட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 18 வயது பூர்த்தி அடைந்த அணைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் ரூ.1000 வீதம் நிதி உதவி வழங்கும் தொடக்க விழா சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர்,

இளங்கோவன்,வேல்முருகன் லெபாஸ், கண்காணிப்பாளர், நல அதிகாரிகள், மற்றும் துறை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரி பிராந்தியத்தை சேர்ந்த 98,647 பயனாளிகளும், காரைக்காலை சேர்ந்த 23,464 பயனாளிகளும் ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த 5,501 பயனாளிகளும் ஆக மொத்தம் 1,27,612 பயனாளிகளுக்கு ரூ.12,76,12,000/- ரூபாய் பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இந்த நிதி உதவி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இன்று முதல் வரவு வைக்கப்படும்.

மேலும்ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், சட்டப்பேரவை பட்ஜெட் அறிவுப்பு, 2024ன் படி வருகின்ற பொங்கல் பண்டிகை – 2025 க்கு ரூ.1000 பணத்திற்கு பதிலாக வட்டி சேலை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். கால அவகாசம் இல்லாத காரணத்தினால் இந்த ஆண்டு தீபாவளிக்கு பணமாக வழங்கப்படுகிறது…

What do you think?

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கான சாலை பாதுகாப்பு பயிற்சி முகாம்

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.