in

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தீயணைப்புத்துறை அலுவலர் ஜெகதீஷ் வாகனத்தில் 97 ஆயிரம் பணம் பறிமுதல்

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ரூ. 97- ஆயிரம் கைப்பற்றினர்.

திருச்சி மாநகரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே திருச்சி மாவட்ட தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

மாவட்ட நிலைய அலுவலராக ஜெகதீஷ் பணியாற்றி வருகிறார்.

தீபாவளி நெருங்கி வருவதை ஒட்டி பட்டாசுக்கடை, ரைஸ்மில் , வணிக நிறுவனங்கள் என பல்வேறு இடங்களிலும் தீயணைப்பு துறையினர் லஞ்சம் பெறுவதாக புகார் வந்தது.

புகாரி அடிப்படையில் இன்று மதியம் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அலுவலகத்தில் சோதனை நடந்தது. அந்த சோதனையில் தற்காலிக தீபாவளி பட்டாசு கடைகள் அமைப்பதற்காக உரிமம் மற்றும் தடையில்லா சான்று பெறுவதற்காக லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.

அப்போது மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ஜெகதீஸ் வாகனத்தில் ரூ.97 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.

பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What do you think?

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் அகற்றிய கோவில் மணி

திருமணம் செய்வதாக கூறி என்னை ஏமாற்றிவிட்டார்….. திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட வாணி ராணி சீரியல் நடிகை ஜெனிப்ரியா