in

தென்காசியில் சிறுவர்கள் பள்ளியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

தென்காசியில் சிறுவர்கள் பள்ளியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை முகாமில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு

அதிமுகவின் 53வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கொண்டாட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் மேலகரம் பகுதியில் அதிமுகவின் 53வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு லிட்டில் ஹாட்ஸ் சிறுவர்கள் பள்ளியில் இலவச கண் பரிசோதனை மற்றும் உடல் முழு பரிசோதனை முகாம் நடைபெற்றது.

அதிமுக பிரமுகர் டேனி அருள்சிங் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக கண்கள் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கு தேவையான மருத்துவம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதிநவீன கண் பரிசோதனை இயந்திரங்களுடன் நடைபெற்ற இந்த முகாமில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்

What do you think?

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி தர்ணா போராட்டம்

ஒ.பி.எஸ் எங்கும் நடமாட முடியாது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை