in

மாணவ மாணவிகள் நடத்திய மாதிரி ஐநா சபை கூட்டம் தனியார் பள்ளியில் சுவாரஸ்யம்

மாணவ மாணவிகள் நடத்திய மாதிரி ஐநா சபை கூட்டம் தனியார் பள்ளியில் சுவாரஸ்யம்

 

மாணவ மாணவிகள் நடத்திய மாதிரி ஐநா சபை கூட்டம், ரஷ்யா உக்ரேன் போர் மற்றும் AI தொழில்நுட்பம் குறித்து விரிவாக விவாதித்த மாணவ மாணவிகள் மயிலாடுதுறையில் தனியார் பள்ளியில் சுவாரஸ்யம்

மயிலாடுதுறை மாவட்டம், மறையூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் இன்று போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் G.ஸ்டாலின் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பங்கேற்ற மாதிரி ஐநா சபையை கூட்டம் நடைபெற்றது. ஐநா சபை பொதுச் செயலாளராக ஜெசிதா என்ற மாணவி பொறுப்பேற்க, அறிக்கையாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் 24 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பதாக கூட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தில் விவசாயம் சார்ந்த பொருளாதாரம், AI தொழில்நுட்ப வளர்ச்சி, உக்ரைன் ரஷ்யா இடையிலான போரினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவ மாணவிகள் ஐநா சபை உறுப்பினர்களாக விவாதம் செய்தனர். பள்ளி தாளாளர் மோகன்ராஜ் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

What do you think?

கனமழை வந்தாலும் இனி தாக்குப்பிடிக்கும் அளவில் பணிகள் நடைபெற்ற வருகிறது-அமைச்சர் மூர்த்தி பேட்டி

முகம் சுளிக்க வைத்த VJ ஆனந்தி…கண்டுக்காம போன விஜய் சேதுபதி