in

எம்ஐடி கல்வியின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினரின் 5 நாள் சோதனை நிறைவு

எம்ஐடி கல்வியின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினரின் 5 நாள் சோதனை நிறைவு

 

திருச்சி முசிறியில் எம்ஐடி கல்வியின் நிறுவனங்களில் வருமான வரித்துறையினரின் 5 நாள் சோதனை காலையில் நிறைவு

திருச்சி மாவட்டம் முசிறியில் எம்.ஐ.டி கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது இதில் எம் ஐ டி பாலிடெக்னிக் கல்லூரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி எம் ஐ டி போதி வித்யாலயா மற்றும் வெள்ளாளப்பட்டியல் எம் ஐ டி வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை இயங்கி வருகிறது.

இந்நிறுவனங்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பரான முன்னாள் கூட்டுறவு சங்கத் மற்றும் சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவன் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் சுவாமி ஐயப்பன் அறக்கட்டளையின்கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனங்களில் செவ்வாய்கிழமை காலை 8 மணி முதல் வருமானவரித் துறையினர் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். இது வழக்கமான ஒன்று என்று கூறினாலும் வருமானவரி சோதனை என்பது முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.

திருச்சி மற்றும் சென்னை வருமான வரி அலுவலகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள்வருகை தந்து சோதனை மேற்கொண்டனர்.விடிய விடிய சோதனை மேற்கொண்டு வருவதால் முக்கிய ஆவணங்கள் கிடைத்து இருக்கலாம் என கருதப்பட்டது.

இந்த சோதனை இன்று காலை 8.00 மணி அளவில் நிறைவுற்றது. இச்சோதனை கடந்த 5 நாட்களாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

விஜய்யின் வெற்றிக்கழக மாநாட்டிற்கு 200 கிலோ மீட்டர் ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டி செல்லும் மாற்றுத்திறனாளி

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழா