in ,

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?

மாவட்ட நிர்வாகத்தின் பணி நிறைவாக இல்லை, பொதுப்பணித் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரையில் தொடர்ந்து பெய்த கனமழையால் செல்லூர் பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது இப்பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

1993இல் இதைவிட அதிகமான கனமழை செல்லூர் பகுதிகளில் பெய்தது. செல்லூர் பகுதியில் 6 அடி 7 அடி உயரத்திற்கு வெள்ளம் வரும்.

திமுக ஆட்சியில் மூன்று ஆண்டுகளாக பொதுப்பணித்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, செல்லூர் பகுதியில் உள்ள மக்கள் மிகவும் ஏழ்மையான மக்கள்,

கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரமா என்று சொல்வது போல் இந்த அரசாங்கம் ஏற்கனவே முழித்துக் கொண்டால் இந்த அளவுக்கு பாதிப்பு வந்திருக்காது,

செல்லூர் பகுதி மக்கள் முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் கொடுக்க வேண்டும் ஒரு வீட்டிற்கு 25,000 நிவாரணம் கொடுக்க வேண்டும்,வேஷ்டி சட்டை அரிசி பருப்பு உள்ளட்டவைகள் கொடுக்க வேண்டும்,

இரண்டு மாதத்திற்கு முன்பாகவே மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் இதுகுறித்து மனு கொடுத்தோம். செல்லூர் பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர் வாருங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். மழை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கிறார்கள்,

மாவட்ட நிர்வாகத்தின் கவனக்குறைவு உள்ளது பணி நிறைவாக இல்லை,

அமைச்சர் மூர்த்தி இந்த பிரச்சனை சரி செய்யப்படும் பாதிப்பு இருக்காது என்று சொல்கிறார். ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

ஆனால் செல்லூர் பகுதி மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 26-10-2024

டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி அடியில் புகுந்த கார்.