in ,

தமிழக வெற்றிக் கழக மாநாடு கழுகு பார்வை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வி சாலை பகுதியில் 27 விவசாயிகளின் 80 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு 50,000 இருக்கைகளுடன் லட்சத்திற்கும் மேற்பட்டோர் நின்று பார்க்கும் அளவிற்கு மாநாடு ஏற்பாடு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

மேலும் மக்கள் கூட்டத்தின் நடுவில் தவெக தலைவர் விஜய் நடந்து சென்று அனைவருக்கும் கைகாட்டி வரவேற்றுவிட்டு அதன்பிறகு பேச மாநாட்டில் உரையாற்ற உள்ளார். மாநாட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

குறிப்பாக கூட்டத்திற்கு வருபவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மதிய உணவு இரவு உணவு ஏற்பாடு செய்யப்படவில்லை. மேலும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 150 மருத்துவர்கள் இங்கு பணியில் அமர்த்தப்பட உள்ளனர். அது மட்டும் இல்லாமல் பாதுகாப்பு பணிக்காக 10,000 ரசிகர் பட்டாளங்கள் பணியாற்ற உள்ளனர்.தொகுதிக்கு 2500 பேர் டார்கெட். ஆனால் வட மாவட்டங்களான தர்மபுரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை வேலூர் கள்ளக்குறிச்சி ,செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து குறைந்தபட்சமாக 5000 பேரையாவது கட்டாயம் அழைத்து வர பேருந்துகள் மற்றும் வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநாடு நடைபெறும் விழுப்புரம் மற்றும் அதன் அருகிலுள்ள கடலூர், போன்ற மாவட்டத் தலைவர்களுக்கு இன்னும் பெரிய டார்கெட் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அதேமாதிரி, பொதுச்செயலாளர் ஆனந்தும் அவருடைய புதுச்சேரியிலிருந்து பெரியளவில் தொண்டர்களை இறக்கவிருக்கிறார் மாநாட்டை மாலை 3 மணிக்குத் தொடங்கவும், மாலை 6 மணிக்கு விஜய் உரை நிகழ்த்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் நலன் சார்ந்தும், உரிமை சார்ந்தும் 18 தீர்மானங்கள் வரை மாநாட்டில் நிறைவேற்ற ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய அரசைக் கண்டித்தும் சில தீர்மானங்கள் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. மேலும் மாநாடு திடலில் 50,000 பேர் அமரும் வகையில் மட்டும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன ஆனால் குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் முதல் 5 லட்சம் வரை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் வருவார்கள் என்று காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

What do you think?

டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி அடியில் புகுந்த கார்.

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் திமுக தொண்டர்களுக்கு 25 லட்சம் மதிப்பிலான தீபாவளி இனிப்புகள் மற்றும் பொற்கிழி வழங்கி மகிழ்ந்தார்