in

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வார சந்தையில் ஆடுகளில் விற்பனை ஐந்து கோடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வார சந்தையில் ஆடுகளில் விற்பனை ஐந்து கோடி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார சந்தை தமிழகத்திலே கால்நடை விற்பனைகளுக்கு மிகவும் பிரபலமான சந்தையாகும்.

குறிப்பாக இந்த சந்தையில் விவசாய இடுபொருட்கள், கால்நடைகள்,காய்கறிகள், உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை நேரடியாக குறைந்த விலையில் வாங்கி செல்வர்.

மேலும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் இயற்கை வளங்களோடு மலைப்பகுதிகளாக திகழ்வதால் இந்த மலைகளில் விளையும் தழைகளை தின்று வளர்க்கப்படும் ஆடுகள் ருசியாக இருப்பதால் தமிழகத்திலிருந்து வியாபாரிகள் அதிகமாக வந்து கால்நடைகளை வாங்கி செல்வார்கள்.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வார சந்தையில் செஞ்சி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை விற்பனைக்காக அதிகாலை 1 மணிக்கு சுற்று வட்டார கிராம பகுதிகளிலிருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகளை வாங்க விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி திருவண்ணாமலை,வேலூர், புதுச்சேரி,காஞ்சிபுரம்,கம்பம், தேனி,சேலம், உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்ங்களிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் அதிக அளவு ஆடுகளை வாங்கி சென்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இறைச்சிக்காக கால்நடைகள் விற்பனை அதிகமாக நடைபெற்றது.

வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் செஞ்சி சந்தையில் ஆடுகள் அதிக விலையில் விற்பதால் அதை வாங்கி சென்று அவர்கள் பகுதியில் விற்கும் போது நஷ்டம் ஏற்படுவதாக கூறுகின்றனர்,

மேலும் பிற மாவட்டங்களில் சந்தைகளில் விற்கும் கால்நடைகள் குறைவாக இருப்பதாகவும் செஞ்சி சந்தையில் ஆடுகளின் விலை அதிகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக ஆடுகள் விற்பனை சுமார் 5 கோடி அளவுக்கு விற்பனை நடைபெற்றது.

ஒரு ஆட்டின் விலை 3000 முதல் 35 ஆயிரம் வரை விற்பனையானது

நல்ல விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

What do you think?

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் திமுக தொண்டர்களுக்கு 25 லட்சம் மதிப்பிலான தீபாவளி இனிப்புகள் மற்றும் பொற்கிழி வழங்கி மகிழ்ந்தார்

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 26-10-2024