in

நத்தம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது

நத்தம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவம் பார்த்த 108 பணியாளர்களுக்கு பாராட்டு குவிகிறது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டுப்பட்டி அருகே லட்சுமணபுரம் பகுதியை சேர்ந்தவர் அழகர் மனைவி புவனேஸ்வரி (வயது 24). இவருக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்ததின் மூலம் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவரை கோசுகுறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது செல்லும் வழியில் திடீரென பிரசவ வலி அதிகமானதால் ஓட்டுநர் சின்னடைக்கன் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்தினார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் அவசர கால ஊழியர் சேகர் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்தார்.

அதில் புவனேஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாயும் சேயும் நலமுடன் கோசுகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

ஓடும் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் நலத்துடன் மருத்துவமனையில் சேர்த்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

What do you think?

எம்ஜிஆர் நடித்த நவீன தொழில்நுட்பத்துடன் உருவான சிரித்து வாழ வேண்டும் திரைப்படம்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு