தேவகோட்டை அருள்மிகு ஶ்ரீகோதண்டராமர் திருக்கோவில் உற்சவர் கோதண்ட ராமர் கருட வாகனத்தில் திருவீதி உலா
தேவகோட்டை அருள்மிகு ஶ்ரீகோதண்டராமர் திருக்கோவில் உற்சவர் கோதண்ட ராமர் கருட வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்குஅருள்பாலித்தார் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபாடு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்று அருள்மிகு ஸ்ரீ சீதாதேவி கோதண்டராமர் லட்சுமணன் திருக்கோவிலில் ஐப்பசி உற்சவ விழாவை முன்னிட்டு ஸ்ரீ கோதண்ட ராமர் கருட வாகனத்தில் திரு விதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக மூலவர் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றன தொடர்ந்து உற்சவர் கோதண்டராமர் சர்வ அலங்காரத்தில் பெரிய திருவடியான கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனைகள் செய்தவுடன் திருவீதி புறப்பாடு துவங்கியது நகரின் முக்கிய வீதிகள் வழியாக திரு உலா வந்த ராமருக்கு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.