என்னை வாழ வைத்த மக்களை நான் வாழ வைக்க வேண்டாமா….ஓங்கிய குரல்… அதிர்ந்த மேடை… அரண்ட அரசியல் தலைவர்கள்
புதுமையான மற்றும் மாறுபட்ட அரசியல் கொள்கையை மாஸ்டர் பிளானுடன் ஏவி மூலம் மக்களுக்கும் தொண்டர்களுக்கும் விலகினார். என் கட்சிக்கு ஏன் இப்படி பெயரை சூட்டினேன் என்ற ஐயம் எல்லோருக்கும் இருக்கும்.
நான் சொல்கிறேன் என்று பல நாளாக சொன்ன அந்த விஷயத்தை இப்பொழுது மக்கள் முன் விளக்குகிறேன் நான் கூறுவதை விட இந்த AV…யை பார்த்தால் உங்களுக்கே புரியும் என்று தன் கட்சிக்கான விளக்கத்தை போட்டு காண்பித்தார்.
நான் ஏன் அரசியலுக்கு வந்தேன் தெரியுமா மத்தவங்கள மாதிரி நானும் நாலு காசு பார்த்தோமா வாழ்க்கையில செட்டில் ஆனோமான் இருக்கணும்னு நினைச்சேன் ஆனால் எத்தனை நாளைக்கு தான் பணம் சம்பாதிக்கிறது என்னை வாழ வைத்த ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று என் மனதுக்குள் சதா ஒரு எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது இதற்கு என்ன வழி என்று ஆராய்ந்த போது இதற்கு ஒரே வழி அரசியல் மட்டும் தான் என்ற முடிவுக்கு நான் வந்தேன் என்று கூறிய போது துள்ளாத மனங்களும் துள்ளி கரகோஷம் விழும்பியது.
என்னுடைய இந்த அரசியல் பயணத்தில் பெண்களே முக்கிய பங்கு வகிக்க போகிறார்கள். என் தங்கை வித்யா இறந்தபோது கூட எனக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை ஆனால் அனிதாவின் மரணம் என்னை பெரிதும் உலுக்கியது.
அன்றைக்கு நான் முடிவு செய்ததுதான் திறமை இருந்தும் படிக்க முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று இனிமேல் யாரும் தங்கள் பிள்ளைகளை படிக்க முடியவில்லை என்று வருத்தப்பட வேண்டாம் உங்கள் மகன் நான் இருக்கிறேன் அவர்களது எதிர்காலத்தை நான் பார்த்துக் கொள்வேன் என்னை பார்க்கும் குட்டீஸ் முதல் பாட்டி..ஸ் வரை எல்லோருக்கும் பிடித்த ஆளாக இருப்பேன் இப்போ மட்டும் அல்ல எப்போதும்மே அப்படி தான் இருப்பேன்.
நான் சினிமாவிற்கு வரும் பொழுது என் முகம் சரியில்லை நான் அழகாக இல்லை முடி நன்றாக இல்லை உடை பாவனை அசிங்கமாக இருக்கிறது என்று என்னை அவமானப்படுத்தியவர்கள் நிறைய, நான் எதற்கும் கலங்காமல் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அடி வாங்கி சுழன்று உழைத்து உழைத்து மேலே வந்தவன் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வரும் இளைஞனாக இருந்த நான் நடிகனாக மாறி பின்னர் வெற்றி நடிகராக மாறினேன் பிறகு பொறுப்புள்ள மனிதனாக மாறினேன்.
இப்பொழுது நான் பொறுப்புள்ள தலைவனாக மாறி உள்ளேன் என்று அவர் பேசிய போது மக்களின் ஆரவாரம் விக்கிரவாண்டியே குலுங்கி குலுங்கி அதிர்ந்தது இனிமேல் நாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நிதானமாகவும் இருக்கும் நாங்கள் வலிமையானவர்கள் என்பதை எங்கள் செயலை மூலம் நிரூபித்து காட்டுவோம் என்று கூறினார்.
தனக்கு என எதுவும் சேர்க்காமல் தமிழ்நாட்டிற்காக தன்னை அற்பணித்த காமராஜர், வாழ்கை அவன் அவனுக்கு என்று கருதாமல் மற்றவர் நலனுக்கு என்று கூறி சீர்திருத்த வாதி பெரியார் வழியிலும், எதிரியை சந்தர்ப்பம் பார்த்து தாக்க வேண்டும் என்ற வீரமங்கை வேலுநாச்சியாரின் அரசியல் கோட்பாடே தனது அரசியல் கொள்கையாக…ஏற்று கலம் இறங்கி இருக்கிறார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள். இவரின் அரசியல் கலம் தேவையற்றதை களை எடுக்குமா….? புரட்சியான இந்த அரசியல் பயணம்?