குயவநடப்பு ஶ்ரீ தர்ம விநாயகர் திருக்கோவில் ஸ்ரீ சோமசுந்தரேஷ்வரருக்கு பிரதோஷ திருநாள் வழிபாடு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் வந்தவாசி அருகே குயவநடப்பு கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ம விநாயகர் திருக்கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சோமசுந்தரி அம்மன் சமேத ஶ்ரீ சோமசுந்தரேஸ்வரர் சுவாமிக்கு பிரதோஷ திருநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன முன்னதாக மூலவர் சுந்தரேஸ்வரர் சுவாமி மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்யப்பட்டன பின்னர் உற்சவ தெய்வங்களை பக்தர்கள் தோளில் சுமந்து கோவில் பிரகாரம் மூன்று முறை வலம் வந்தனர் நிறைவாக சுவாமிக்கு மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்மன் நந்தி பகவானை வழிபட்டனர்.