நாமக்கல் பரமத்தி வேலூர் எல்லையம்மன் ஆலயத்தில் பிரதோஷ விழா
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரநாதருக்கு ஐப்பசி மாத தேய்பிறை பிரதோஷத்தினை முன்னிட்டு பல வகை வாசனை திரவியங்களினால் அபிஷேகம் செய்யப்பட்டு பலவகை இனிப்புகளினால் சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாரனை காண்பிக்கப்பட்டது.
பிரதோஷ விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதமும் அன்னதானம் வழங்கப்பட்டது.