ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வாா் திருக்கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்
ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வாா் திருக்கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் கண்டருளிய பொலிந்து நின்றபிரான் சுவாமி நம்மாழ்வாா்.
சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலிலில் சேவை சாதித்த பெருமாள் தாயாா் மற்றும் சுவாமி நம்மாழ்வாா் சிறப்பு தீபாராதனைகள. ஜீயா் சுவாமிகள் ஆச்சாா்ய பெருமக்கள் பக்தா்கள் கலந்துகொண்டு தாிசனம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் ஆன்மிக சிறப்புபெற்ற நவதிருப்பதி திருக்கோவில்கள் அமைந்துள்ளன. இதில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதிகளில் ஒன்பதாவது திருப்பதியும் குருவுக்கு அதிபதியானதுமான ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர், சுவாமி நம்மாழ்வார் திருக்கோவில் அமைந்துள்ளது.
சுவாமி நம்மாழ்வாாின் அவதார இடமான இக்கோயிலில் ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடைபெறுகின்றன. அதன்படி ஐப்பசி மாதத்தில் வரும் ஊஞ்சல் உற்சவம் 10 தினங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டுக்கான ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் கடந்த 20ம் தேதி ஆரம்பமாயிற்று.
நிறைவு தினமான (10 ம்நாள்) நேற்று இரவு ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி சமேத சுவாமி பொலிந்து நின்றபிரான் மற்றும் சுவாமி நம்மாழ்வாா் மூலஸ்தானத்தில் இருந்து தாயாா் சன்னதிக்கு ஏழுந்தருள்கின்றனா். அங்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் தாயாா்கள் சமேத ஸ்ரீபொலிந்து நின்றபிரான் மற்றும் சுவாமி நம்மாழ்வாா் ஊஞ்சல் சேவை சாதிக்கின்றனா்.
பெண்களும் அா்ச்சகரும் ஊஞ்சல் பாட்டு பாடியபடி இருக்க சாயராட்சை பூஜைகள் நடைபெற்று நட்சத்திர ஆரத்தி கும்பஆரத்தி கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படுகின்றது.
தொடா்ந்து பெருமாளிடமிருந்து மாலை பாிவட்டம் சடாாி முதலியவைகள் அரையா் தாளத்துடன் சுவாமி நம்மாழ்வாருக்கு எடுத்து வரப்பட்டு ஆழ்வாருக்கு மாியாதை செய்யப்படுகின்றது. பின்னா் அரையா் தாளத்துடன் வேத சாரமான திருவாய்மொழியை ஆழ்வாா்திருநகாி எம்பெருமானாா் ஜீயா் சுவாமிகள் ஆச்சாா்ய பெருமக்கள் பாடிட மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னா் கோஷ்டியினருக்கும் பொதுமக்களுக்கும் தீா்த்தம் சடாாி மாியாதை செய்ப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிறைவாக இந் நிகழ்வில் திருக்குறுங்குடி பேரருளாள ராமானுஜ ஜீயா் சுவாமிகள் ஏழுந்தருளி மங்களாசாசனம் செய்தாா். ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தாிசனம் செய்தனா்.