திருச்சி மாவட்டம் துறையூரில் குட்கா கடத்தி வந்த காரை பொதுமக்கள் உதவியுடன் துரத்தி பிடித்த போலீசார் இரண்டு வடநாட்டு நபர்களை கைது செய்து விசாரணை.
தம்மம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து துறையூர் மற்றும் உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு வெளி மாநிலத்திலிருந்து காரில் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து உப்பிலியாபுரம் பகுதியில் போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்த முயன்ற போது காரை ஓட்டி வந்த வட இந்திய நபர்கள் போலீசுக்கு போக்கு காட்டி வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. சிக்கத்தம்பூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு உப்பிலிபுரம் காவல் நிலையத்தில் இருந்து தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சிக்கதம்பூரில் பொதுமக்கள் சாலையில் கல்லை வைத்து காரை தேக்கியுள்ளனர். அங்கேயும் காரை நிறுத்தாமல் வட இந்தியர்கள் துறையூரை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. துறையூர் பாலக்கரை பகுதியில் போலீசார் பேரிகாடுகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் உதவியுடன் காரை பிடித்தனர். இதை அடுத்து காரில் இருந்த இரண்டு வட இந்தியர்களை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பொதுமக்கள் மத்தியில் காரில் குழந்தையை கடத்தி வந்ததாக தகவல் பரவியதால் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடி காரை அடித்து சேதப்படுத்தினர் பொதுமக்களிடமிருந்து போலீசார் காரை மீட்டனர். பல இடங்களில் தேக்கியும் காரை நிறுத்தாமல் துறையூர் பகுதியில் குட்கா பொருட்களை கடத்தி வந்த கார் சிக்கிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது