அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாணம் நடைபெற்றதை தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி அம்பாள் ஊஞ்சல் மற்றும் நலுங்கு விழா சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தா்கள் தாிசனம்
நெல்லை மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலின் முக்கிய விழாவான ஐப்பசி திருக்கல்யாண விழா, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 15 தினங்கள் நடைபெறும் திருவிழாவில் சிகர நிகழ்வான காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் கடந்த 29ம்தேதி அம்மன் சன்னதியில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருக்கல்யாணம் முடிந்ததை தொடா்ந்து அம்பாள் திருக்கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் கடந்த 3 தினங்களாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை மற்றும் இரவில் ஊஞ்சல் மற்றும் நலுங்கு திருவிழா நடைபெற்றது. ஊஞ்சல் திருவிழாவின் நிறைவு நாளான இன்று மாலை சாயரட்சை பூஜைகள் முடிவடைந்ததும் அலங்காிக்கப்பட்ட ஊஞ்சலில் சுவாமி அம்பாள் அறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.
சுவாமி அம்பாள் கால்களில் நலுங்கு இடுதல், பன்னீா் தௌித்தல், குங்குமம்,சந்தணம் பூசுதல், தலைவாாி பூச்சூட்டுதல், மாலை மாற்றுதல், அப்பளம் உடைத்து திருஷ்டி கழித்தல், பூப்பந்து உருட்டுதல் போன்ற நிகழ்வுகள் சிவாச்சாரியார்களால் நடத்திப்பட்டது. திருமண விழாக்களில் கணவன், மனைவிக்கு இடையே ஒருமித்த மனநிலையையும், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கை ஏற்படுத்தும் நிகழ்வாக நலுங்கு விழா நடத்தப்படுகிறது. வந்திருந்த பெண்களின் நலுங்கு மற்றும் ஊஞ்சல் பாடல்கள் பாடினா். ஊஞ்சலில் ஒய்யாரமாக ஆடியபடி சுவாமி அம்பாள் இருக்க வேதம் நாதம் திருமறை பஞ்சபுராணம் பாடினா். நிறைவாக சுவாமி அம்பாளுக்கு சோடச உபசாரங்களுடன் கோபுர ஆரத்தி கற்பூர ஆா்த்தி காண்பிக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா். நாளை மறுவீடு பட்டிணப்பிரவேசம் நடைபெறுகின்றது.