in

செஞ்சி அருகே அடகு வைத்த நகையை மீட்டுத்தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் வங்கி முன் தர்ணா போராட்டம்.

செஞ்சி அருகே அடகு வைத்த நகையை மீட்டுத்தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் வங்கி முன் தர்ணா போராட்டம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அடகு வைத்த நகையை மீட்டுத்தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் கூட்டுறவு வங்கி எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

செஞ்சி வட்டம் சத்தியமங்கலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் சோ.குப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் சோ.குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார் இவர் கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் 5 தவணையாக 25 பவுன் தங்க நகைகளை சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து ரூ 3 லட்சத்து 12 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

கடனை பெற்று ஒரு ஆண்டு ஆகியதால் திரும்ப வங்கிக்கு சென்று அசலும், வட்டியையும் சேர்த்து கட்டி நகையை மீட்க சென்ற போது அந்த வங்கியில் பணியாற்றிய செயலர் சாதிக்பாஷா என்பவர் பல கோடி முறைகேடு செய்துவிட்டாதாகவும், அவர் கடந்த ஆண்டு இறந்து விட்டதாலும், மேலும் முறைகேடு குறித்து அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருவதாகவும், வங்கியில் வைத்த நகைகளை மீட்க முடியாது என உள்ள வங்கி ஊழியர்கள் ராஜேந்திரனை திருப்பி அனுப்பி விட்டனர்.

இது குறித்து நகையை அடகு வைத்த ராஜேந்திரன் சத்தியமங்கலம் காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியரியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நகையை மீட்பதற்காக ரூ 3,12,000. லட்சத்தை எடுத்து சென்று நகையை மீட்டுத்தருமாறு கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு வங்கி ஊழியர்கள் நகைக்கான வட்டி தொகு ரூ 1.68 லட்சத்தை கட்டினால் தான் நகையை மீட்கமுடியும் என கூறியுள்ளனர். இதற்கு ராஜேந்திரன் நகையை அடகு வைத்த ஒரே ஆண்டில் நான் மீட்க வரும்போது பணத்தை பெற்றுக்கொண்டு நகையை மீட்டுத்தராமல் பணத்தை வாங்க மறுத்து என்னை திருப்பி அனுப்பி விட்டீர்கள் அப்போது என்ன வட்டியோ அந்த வட்டியை மட்டும்தான் கட்டுவேன் என கூறியுள்ளார்.

ஆனால் வங்கி நிர்வாகம் நகையை மீட்டுத்தரமுடியாது என மறுத்து விட்டனர்.

இதனால் மன உளச்சலுக்கு பாதிப்பான ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் கூட்டுறத்துறை அதிகாரிகள் மற்றும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்ககோரி சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் ராஜேந்திரனிடம் பேச்சு வார்த்தை நடத்தி வங்கி உயர் அதிகாரிகளிடம் இது குறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர் அங்கிருந்து சென்றார்.

What do you think?

செஞ்சி சந்தமேடு குட்டக்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் 48-வது நாள் மண்டல பூஜை

திருத்துறைப்பூண்டியில்  ஸ்ரீ ராமர் கோவிலில் கேதார கௌரி நோன்பு சிறப்பு பூஜை