in

திருத்துறைப்பூண்டியில்  ஸ்ரீ ராமர் கோவிலில் கேதார கௌரி நோன்பு சிறப்பு பூஜை

திருத்துறைப்பூண்டியில்  ஸ்ரீ ராமர் கோவிலில் கேதார கௌரி நோன்பு சிறப்பு பூஜை நடைபெற்றது ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

ஆண்டுதோறும் தீபாவளி  பண்டிகையினையொட்டி கேதார கெளரி நோன்பு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நோன்பு ஐப்பசி மாத வளர்பிறை அம்மாவாசையின் முன்தாக 21 நாள் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நோன்பானது பரமசிவனுக்காக பார்வதி மேற்கொண்டதாக ஐதீகம்.ஆணும்,பெண்ணும் சரிசமமாக இருக்கவேண்டும் என உணர்த்தும்  கேதார கௌரி  நோன்பினை கடைபிடிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை  குறிப்பாக கணவனை பிரிந்த பெண்கள் கேதார கௌரி நோன்பினை மேற்கொண்டால் மீண்டும் நல்ல வாழ்க்கை அமையும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இதுபோல நல்ல கல்வி, செல்வம் போன்றவைகளும் சிறப்பாக கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது அதன்படி  இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் கேதார கௌரி நோன்பு சிறப்பு பூஜை நடைபெற்றது. இப்பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலிகள் தனது கணவர் ஆரோக்கியம் மேம்பட வேண்டியும், தீர்க்க சுமங்கலியாக திகழ வேண்டும் என்பதற்காகவும்  சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.விமர்சையாக நடைபெற்ற இப்பூஜையில்  ஏராளமான பெண்கள் கலந்த கொண்டனர்.

What do you think?

செஞ்சி அருகே அடகு வைத்த நகையை மீட்டுத்தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் வங்கி முன் தர்ணா போராட்டம்.

தீப திருநாளை யொட்டி காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோயில் ராஜகோபுரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுடன் பட்டாசு வெடித்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.