திரும்பவும் வாய் கொடுத்து புண்ணாக்கிகிட்ட விஜய் சேதுபதியின் மகன் சூர்யா
நடிகர்கள் தங்கள் வாரிசுகளை நடிகர்களாக்குவது புதிதல்ல அந்த லிஸ்டில் தற்பொழுது புதிதாக இணைந்திருப்பவர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா.
அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்திருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ள நிலையை அப்படத்தின் ப்ரோமோஷன் போது விஜய் சேதுபதி மகன் பேசிய விஷயம் Trend…டாகி வருகிறது.
அதாவது எனது அப்பா எனக்கு தினமும் 500 ரூபாய் தான் பாக்கெட் பண்ணி கொடுப்பார் அதனால் நான் நடிக்க வந்தேன் என்று கூறியதாக இணையத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.
அதற்கு சூர்யா நான் அப்படி எதுவும் பேசவில்லை என்று கூறியவர் டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம் போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம் நடிகர் மகன் மட்டும் ஆக கூடாதா ஒரு நடிகரின் மகன் என்ற விதத்தில் சான்ஸ் கிடைக்கும் ஆனால் நாம் உழைத்தால் மட்டும் தான் பெரிய நடிகன் என்ற அந்தஸ்துக்கு உயரமுடியும் என்று சூர்யா கூறினார்.
இவரின் இந்த பதிவிற்கு நெடிசன்ஸ் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டாக்டர் மகன் எப்படி படிக்காமல் டாக்டராக முடியும் நீட் தேர்வில் பாஸ் செய்து எம்பிபிஎஸ் சீட் கிடைக்க வேண்டும்.
அந்த சான்ஸ் கிடைக்காமல் தான் எவ்வளவு பேர் அல்லாடுகிறார்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலர் அந்த சான்ஸ் கிடைக்காம தான் நாங்க எல்லாம் எவ்ளோ கஷ்டப்படுரோம் உங்களுக்கு எப்படி அந்த சான்ஸ் கிடைச்சது…இன்னு சொல்லலையே ..இன்னு ஒருத்தரும், நடிகர் மகன் நடிகர் ஆவதுதான் ஈஸி. அதை புரிந்துகொள்லுங்கள் என்று கடுப்புடன் Comments செய்கிறார்கள் இணைய வாசிகள்.