ஏழுமலையான் தரிசனத்திற்கு 24 மணி நேரம்.
தீபாவளி விடுமுறைகளை தொடர்ந்து இன்று காலை முதல் திருப்பதி மலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
இதனால் இலவச தரிசனத்திற்காக 24 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இலவச தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் கூட்டம் காரணமாக திருமலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள் நிரம்பி அதற்கு வெளியே சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர்,டீ, காபி போன்ற அடிப்படை தேவைகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது.
இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆகும் நிலையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றார்.
நேற்று திருப்பதி ஏழுமலையானை 67 ஆயிரத்து 785 பக்தர்கள் வழிபட்டு கோவில் உண்டியலில் 2 கோடியே 38 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.