in

குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி அத்திமடை கடைத்தெரு பகுதியில் அத்திமடை முதல் தேசிங்கு ராஜபுரம் கிழக்கு தெரு வரையிலான குண்டும் குழியுமாக உள்ள இணைப்பு சாலையை பல வருடங்களாக சீரமைத்து தராத பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து கிராம மக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பாமணி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி(அதிமுக ) தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று உடனடியாக சாலை அமைத்து தர வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக திருத்துறைப்பூண்டி நாகை நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

What do you think?

முத்துப்பேட்டை உலக பிரசித்தி பெற்ற தர்காவில் 723 ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடிமரம் மாற்றும் விவகாரம்