in

தொடர் விடுமுறையை முன்னிட்டு புகழ்பெற்ற தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு புகழ்பெற்ற தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

 

தொடர் விடுமுறையை முன்னிட்டு புகழ்பெற்ற தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த பொதுமக்கள் கடலில் குளித்தும் புகைப்படங்கள் எடுத்தும் உற்சாக கொண்டாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழ்வது தரங்கம்பாடி கடற்கரை இங்கு டேனிஷ் கோட்டை ஆளுநர் மாளிகை, மாசிலாமணி நாதர்கோவில், என வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு இடங்கள் உள்ளன.

மேலும் உலகில் அதிக அளவு ஓசோன் காற்று வீசக்கூடிய கடற்கரையாக இது உள்ளது எனவே இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதியில் இருந்து வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வழக்கத்தை விட ஏராளமான உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்திருந்து கடற்கரையில் குளித்தும் புகைப்படங்கள் எடுத்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

வழக்கத்தை விட ஏராளமான பொதுமக்கள் கடற்கரைக்கு வந்திருந்ததால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

What do you think?

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக நெய் குட காணிக்கை

Nayanthara ஸ்டைலில் குழந்தைக்கு பெயர் வைத்த தீபிகா