in

முதல் திருமணத்தை மறைத்து நடிகையை திருமணம் செய்தாரா? கிறிஸ் வேணுகோபால்


Watch – YouTube Click

முதல் திருமணத்தை மறைத்து நடிகையை திருமணம் செய்தாரா? கிறிஸ் வேணுகோபால்

சமிப காலமாக திரை உலகில் எந்த பக்கம் திரும்பினாலும் ஒரே திருமண கொண்டாட்டமாக இருக்கிறது. தற்பொழுது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுக்கும் அளவிற்கு ஒரு நடிகை திருமணம் செய்திருக்கிறார்.

மலையாள நடிகையான திவ்யா ஸ்ரீதர் கண்டக்டர் என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்ந்தார்.

2019 ஆம் ஆண்டு முதல் தனது கணவரை பிரிந்த இவருக்கு தேவானந்தம் மற்றும் மாயா என்ற இரு குழந்தைகள் உண்டு அதன் பிறகு டிவி சீரியல் பிஸியான இவர் பத்திரமாற்று என்ற தொடரில் கிறிஸ் வேணுகோபாலுடன் இணைந்து நடித்தார்.

கிரிஷ் வேணுகோபால் ஒரு சிறந்த பேச்சாளர், இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகர். 50 வயதாகும் இவர் சீரியலில் நடிக்கும் போது திவ்யா ஸ்ரீதரை காதலிக்க தொடங்கினார் .

நீண்ட தாடியும் வயதான தோற்றமும் , தன்னைவிட 20 வயது குறைவான, விவாகரத்தாகிய திவ்யாஸ்ரீதரை திருமணம் செய்து கொண்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இது குறித்து பேசி திவ்யா ஸ்ரீதர் அவர் முதலில் என்னிடம் காதலை சொல்லும் பொழுது என்னை கேலி செய்கிறார் என்று நினைத்தேன் அதன் பிறகு அவர் உண்மையாக என்னை காதலிக்கிறார் என்று உணர்ந்த நான் இது சம்பந்தமாக என் குழந்தைகளிடம் ஆலோசித்தேன் இந்த பிணைப்பு உண்மையானதாக இருக்கும் என்று உணர்ந்த பிறகு இந்த திருமணத்திற்கு சம்மதித்தேன் இவரை திருமணம் செய்து பிறகு பல விமர்சனங்கள் எழும் என்று எனக்கு தெரியும் அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வதுதான் பலருக்கு வேலை எங்கள் திருமணத்திற்கு எப்படிபட்ட எதிர்மறையான கருத்துக்களும் பிரச்சனைகளும் வந்தாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

குடும்பத்தினர் முன்னிலையில் ரகசியமாக திவ்யா ஸ்ரீதர் வேணுகோபாலை திருமணம் செய்தார். வேணுகோபால் தனது முதல் மனைவியை ஏமாற்றிவிட்டு திவ்யா …வை திருமணம் செய்திருக்கிறார் என்று பலர் கமெண்ட் செய்ய அதற்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

வேணுகோபால் சுதந்திரம் இல்லாத திருமணத்தால் நான் மிகவும் சிரமப்பட்டேன் நான் ஒரு வளர்ப்புப் பிராணி போன்று வாழ்ந்தேன். கண்ணாடிக்கூண்டுக்குள் அடைத்து வளர்க்க நான் என்ன சிலந்தி பூச்சியா அதனால் அந்த பந்தத்தில் இருந்து நான் வெளியேறிவிட்டேன் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

தனுஷ்…சுடன் தீபாவளி கொண்டாடிய ஐஸ்வர்யா

விஜய் குறித்து நெப்போலியன்…. நெப்போலிய…னுக்கு எதிராக எழும் கண்டனம்