முகுந்த் வரதராஜனை கொண்டாட வேண்டும்…. சாதி ரீதியாக பிரித்து பார்க்க வேண்டாம் விமர்சனங்கலுக்கு நெத்தியடி கொடுத்த இயக்குனர்
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி வசூல் மழை பொழிகிறது. அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி மேஜர் முகுந்தனாகவும் ரெபேக்கா வர்கீஸ் ஆகவும் வாழ்ந்திருக்கிறார்கள் நிச்சயம் விருதுக்கு தகுதியான படம் . இந்த படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகள் கிளம்பினாலும் படம் திட்டமிட்டபடி வெளியானது.
சிரிக்க வைக்க மட்டுமே தெரிந்த siva..இந்த படத்தில் ரசிகர்கலை கண்ணீரில் நனைய வைத்துவிட்டார். அமரன் படம் தொடங்கியதில் இருந்து தியேட்டர்… நிசப்த்தமான அமைதியில் இருந்தது சிவகார்த்தி மட்டும் சாய் பல்லவி இருவரும் போட்டி போட்டு நடித்து ரசிகர்கள் படம் முடிந்த பின்னும் நகரமுடியாமல் அழ வைத்து விட்டனர். கனத்த இதயத்துடன் ரசிகர்களை வழி அனுப்பினார் இயக்குனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட கமல்ஹாசனுக்கு போன் செய்து, படம் டச்சிங்கா இருக்கு, க்ளைமேக்ஸ் காட்சியில கண்ணு கலங்கிடுச்சு எனக் கூறினார்.அருமையான படத்தை கொண்டாடாமல் ஒரு சில கூட்டம் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் அள்ளி வீசிவருகிறது .
இப்ப பிரச்சனை என்ன…னா இந்த படத்தில் மேஜர் முகுந்தனின் சமூக பின்னணியை மறைத்து படம் எடுத்துடாங்கலாம் …படத்தை பற்றி குறை சொல்ல முடியலை..இன்னு ஜாதியை வெச்சு சர்ச்சைகள் கிளம்புது இதற்கு இயக்குனர் அமரன் பட வெற்றி விழாவில் விளக்கம் அளித்துள்ளார் முகுந்தனை தமிழனாக அடையாளம் காட்ட வேண்டும் என்பது அவரது மனைவி ரெபேக்கா வர்கீஸ் ..இன் கோரிக்கை .முகுந்தன் தந்தை வரதராஜனும் தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே ஆசைப்படுகிறார் தனது சான்றிதழில் கூட எந்த குறியீடு இருக்கக்கூடாது என்று நினைப்பவர் எனவே முகுந்தனுக்கு தமிழன், இந்தியன் என்ற அடையாளத்தை இந்த படத்தில் கொடுங்கள், மேலும் தமிழ் சாயல் கொண்ட நடிகர் மட்டுமே, தேர்ந்தேடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள் .
எனவே அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பது எங்களுக்கு முக்கியமில்லை நாங்களும் அதை கேட்கவில்லை அவரது கோரிக்கைகளை மட்டுமே நாங்கள் நிறைவேற்றியுள்ளோம் என்றார். முகுந்த் வரதராஜனை கொண்டாட வேண்டிய படம்… சாதி ரீதியாக பிரித்து பார்த்து அவரது தியாகத்தை கொச்சை படுத்த வேண்டாம்