பழையன கழிதலும்… புதியன புகுதலும்…’ – தனது எக்ஸ் தள பதிவுக்கு மருத்துவர் ராமதாஸ் விளக்கம்
பழையன கழிதலும்… புதியன புகுதலும் என்று அண்மையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் கருத்துப் பதிவிட்டிருந்தார். இது பல்வேறு விமர்சனங்களையும் ஊகங்களையும் கிளப்பியது. ராமதாஸ் கூட்டணி மாறப் போவதாகவும் சிலர் பேச ஆரம்பித்தார்கள்.
இந்த நிலையில், அந்தப் பதிவுக்கான விளக்கத்தை ராமதாஸ் இன்று அளித்தார்.பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற நூற்பாவிற்கும், அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த நன்னூல் சூத்திரம் முழுமையாக யாருக்கும் புரியாததால் அதை முழுமையாக பதிவிட்டேன்.
இந்த நன்னூல் நூற்பாவின் விளக்கம் என்னவெனில், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது தவறில்லை. உதாரணமாக, மரத்தில் கொழுந்தாக உள்ள இலை பின் பழுத்து விழுந்தால் அது தவறில்லை என்பதாகும். கடலூர் காவல்துறைக்கு கற்பனை அதிகம். ஒரு சார்பு இல்லாமல் விருப்பு, வெறுப்பு இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். என்ன நடவடிக்கை எடுத்தாலும் எங்களை அடக்க முடியாது. நாங்கள் நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.
கலைஞர் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கவேண்டும் என்பார். அதையே நானும் சொல்கிறேன். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளதால் அப்போது பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் முதலில் நான் தான் அவர்களுக்கு ஆதரவாக நிற்பேன்” என்றார் அவர்.
தொடர்ந்து பேசிய வன்னியர் சங்கத்தலைவர் பு.தா.அருள்மொழி, “காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் கழுத்தை அறுப்பேன் என்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதை காவல்துறை கண்காணிப்பாளர் அனுமதிக்கலாமா? எனக்கு இருப்பது ஒரு கழுத்தா?” என்று கேள்வி எழுப்பினார்.