ஷாருக்கான் உயிருக்கு… மிரட்டல்..பரபரப்பில் இந்தி திரையுலம்
அண்மையில் சல்மான்கானுக்கு மிரட்டல் வந்த நிலையில் நேற்று ஷாருக்கானின் உயிருக்கு மிரட்டல் ஒரு கும்பல், விடுத்ததால் அவர் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருகிறது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை அழிக்க செய்யப்போவதாக மிரட்டி நடிகரிடம் ரூ.50 லட்சம் கேட்டதாக ஒரு நபரிடம் இருந்து மும்பை போலீசாருக்கு போன் வந்தது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த ஃபைசன் கான் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. இது தொடர்பாக பாந்த்ரா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை ஷாருக்கான் வழக்குப் பதிவு செய்யதார்.
இந்த மிரட்டலுக்கு காரணமானவரை கர்நாடகாவில் போலீசார் கைது செய்தனர் . செவ்வாய்க்கிழமை அன்று மும்பை பாந்திரா போலீஸ் நிலையத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து பைசான் கான் என்பவர் போன் செய்து 50 லட்சம் தரவில்லை எனில் நடிகர் ஷாருக்கான் காலி செய்து விடுவோம் என்று கூறி போனை கட் செய்து விட்டார்.
பைசான் கான் என்ற நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும், விசாரணையின் போது, கான் தன்னை ஒரு வழக்கறிஞர் என்றும், நவம்பர் 2 ஆம் தேதி அவரது தொலைபேசி திருடப்பட்டது என்றும் கூறினார். இது தொடர்பாக தான் புகார் அளித்ததாகவும், அதை யாரோ தவறாக பயன்படுத்தி ஷாருக்கானை மிரட்டியதாகவும் அவர் கூறினார்.
இதுல சுவாரஸ்யமான விஷயம் என்ன..னா இரண்டு மத குழுக்களிடையே பகையை ஏற்படுத்தியதற்காக நடிகர் மீது பாந்த்ரா காவல் நிலையத்தில் ஃபைசன் புகார் அளித்திருக்கிறார், அஞ்சாம் படத்தில் ஷாருக்கான் மானைக் வேட்டையாடி அதைச் சமைத்து சாப்பிடுமாறு ஊழியர்களிடம் கூறிஇருப்பார்.
நடிகருக்கு பயங்கரவாததுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி. யூடியூப்பில் பைசானால் ஒரு வீடியோவும் ஏற்கனவே வெளியிடப்பட்டிருகிறது. தற்பொழுது ஷாருகானுக்கும் பாதுகாப்பு அவசியம் என்று போலீசார் கருதியதற்கு காரணம் பாபா சித்திக் கடந்த மாதம் மும்பையில் சுடபட்டார். இவர் சல்மான்கான் மற்றும் ஷாருக்கானின் நெருங்கிய நண்பர் இவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே ஷாருக்கானுக்கு அக்டோபர் மாதம் ஒரு மிரட்டல் வந்தது இவருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதை அறிந்த ஹிந்தி திரை உலகம் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.