மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணி சாமி ஆலய கந்த சஷ்டி விழா திருக்கல்யாணம்
மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணி சாமி ஆலய கந்த சஷ்டி விழாவின் ஏழாம் நாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணி ஆலய கந்த சஷ்டி திருவிழா நவ.2-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
கந்த சஷ்டி திருவிழாவின் உற்சவ தெய்வமான ஸ்ரீ சண்முகர் தினமும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளினர். ஆறாம் நாளான நேற்று சூரசம்ஹாரம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலும் ஏழாம்நாளான நேற்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு சஷ்டி மண்டபம் வண்ண மலர்களால் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மாலை 7.15 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
பின்பு தீபதூப ஆராதனைகள் நடந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மயிலம் பொம்மபுர ஆதினம் 20 ஆம் பட்டம் சிவஞான பாலயா சுவாமிகள் செய்திருந்தனர்.
திருக்கல்யாணத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருமணக்கோலத்தில் காட்சியளித்த முருகன்
வள்ளி, தெய்வானையை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.