கங்குவா….படத்தில் கார்த்தி….யா? ட்விஸ்ட் வைத்த இயக்குனர்
அமரன் படம் ஒரு பக்கம் வசூல் ரீதியில் அள்ளினாலும், சூர்யா மற்றும் பாபி தியோல் நடித்துள்ள கங்குவா, இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும்.
நவம்பர் 14 ஆம் தேதி படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக, தயாரிப்பாளர்கள் வெளிட்டுள்ள ட்ரெய்லரில், சூர்யா இரண்டு காலவரிசைகளில் இடம்பெற்றுள்ளார்.
ஒரு சூரியா நவீன கால அவதாரம் எடுத்து பழிவாங்குகிறார். மற்றறொரு சூர்யா கடந்த காலத்தில் எதிரிகளுடன் சண்டையிடும் இரக்கமற்ற போர்வீரனாக தோன்றியுள்ளார்.
Trailer…ரில் சூர்யாவின் கதாப்பாத்திரம் பற்றி அதிகம் வெளிப்படுத்தவில்லை என்றாலும், இறுதிக் காட்சியில் ஒரு மர்மமான நபர் சுருட்டு புகைப்பதைக் காட்டபடுகிறது.
அந்த நபர் வேறு யாருமல்ல கார்த்திதான் என நெட்டிசன்கள் நம்புகிறார்கள். இதுவரை ஏற்றில்லாத ஒரு கதாபாத்திரதில் கங்குவா படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். என்று இசையை வெளியிட்டு விழாவில் சிறுத்தை சிவா கூறினார்.
இந்த படத்திற்காக சூர்யா தன்னுடைய உயிரை கொடுத்து நடித்திருக்கிறார் .சூர்யா எந்த படத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரத்துக்காக தன்னை அதிகம் வருத்தி ஒர்கவுட் செய்பவர். படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுதே சூர்யா எவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறார் என்று தெரிகிறது.
படப்பிடிப்பின் போது எவ்வளவு அடிபட்டாலும் உடனே எழுந்து வந்து இந்த டேக் ஓகேவா அல்லது மறுபடியும் போகலாமா என்று கேட்பார் இப்படி ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை என்று கூறியுள்ளார் Siva.
சமீபத்திய பேட்டியில், கங்குவா படத்தைப் பார்த்த பிறகு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு படைப்பாளியும் இயக்குனரும் திகைத்துப்போவார்கள், கங்குவா ஒரு அதீத காட்சி களியாட்டமாக இருக்கும் என்று சூர்யா கூறினார்.
இந்த படம் நிச்சயம் 2000 கோடி வசூல் பெரும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அடித்து கூருகிறார், படம் ரிலீஸ் ஆக இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் பட குழுவினர் பயங்கர டென்ஷனில் இருக்கின்றனர்.
முதல்முறையாக இத்தனை மொழிகளில் பல கோடி இன்வெஸ்ட் செய்து பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் கங்குவா…… சர்வதேச படங்களுக்கு இணையாக இருக்கும் என்று, ரசிகர்கலை உற்சாக படுத்தி வருகின்றனர் கங்குவா டீம்.