சட்டத்தை எதிர்த்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை எதிர்த்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம், போராட்டம் நடத்தப்படும் என்று மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி.
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் இன்று மயிலாடுதுறை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். விவசாயிகள் போராட்டத்தின் போது நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த மத்திய அரசு பல வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை.
இதனை கண்டித்து மாநில அளவில் பிரச்சார பயணம் மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் இடம் பிரதமருக்கான கோரிக்கை மனுவை அனுப்புவது என்றும், அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், தமிழக அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.