தலைமறைவான நடிகை கஸ்தூரி… போலீசார் தீவிர தேடல்
தமிழகத்தில் பிராமணர்கள் துன்புறுத்தப்படுவதாக நவம்பர் 3-ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மக்கள் கட்சி (எச்எம்கே) என்ற வலதுசாரி அமைப்பின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் ஏற்பாடு செய்த இந்த பேரணி, சாதிவெறி நடைமுறையை ஒழித்த சிவில் உரிமைகள் (பிசிஆர்) எனபடும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் “பாதுகாப்பு” பிராமணர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரியது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் தெலுங்கு சமூகங்களின் தோற்றம் குறித்து பேசிய வீடியோவை யூடியூப் சேனல் ஒன்று பரப்பியது.
கொந்தளித்த தெலுங்கு மக்கள் நடிகை கஸ்தூரி மீது பல பிரிவுகளின் கீழ் பல போலீஸ் நிலையங்கலில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் நடிகை கஸ்தூரி மீது சென்னை கிரேட்டர் சென்னை காவல்துறை (ஜிசிபி) வழக்கு பதிவு செய்துள்ளது.
இது சம்பந்தமாக விசாரணை நடத்த எழும்பூர் போலீசார் சமன் கொடுக்க கஸ்தூரி வீட்டிற்கு கொடுக்க சென்ற பொழுது பல மணி நேரம் காலிங் பெல் அடித்தும்’ கதவு திறக்கப்படவில்லை அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது எல்லா செல்போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதால் சமன்னை …அவரது வீட்டு சுவரில் ஒட்டினர்.
நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாகவும், அவர் முன் ஜாமின் பெற முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியானதையடுத்து நடிகை கஸ்தூரியை தேடும் தீவிர வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர்.