in

நீதித்துறையின் மீது மிகுந்த அக்கறையும், நீதித்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் அரசு தமிழ்நாடு அரசு

நீதித்துறையின் மீது மிகுந்த அக்கறையும், நீதித்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் அரசு தமிழ்நாடு அரசு… சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பெருமதம்…

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் புதியதாக மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், செய்யாறு தாலுகாவில் புதியதாக கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகியவை திறப்பு விழா நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் திறக்கப்பட்டு உள்ள மாவட்ட உாிமையியல் மறறும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்றதலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் சங்கீதா மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் தலைமை தாங்கி காணொலி காட்சி மூலம் செய்யாறு தாலுகா கூடுதல் சார்பு நீதிமன்றத்தையும் திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழாவில் சென்னை உயர்நதிமன்ற நீதிபதிகள் டி.பரதசக்கரவர்த்தி, கே.குமரேஷ்பாபு, சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்பி சுதாகர், மற்றும் மாவட்ட நீதிபதிகள் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய போது..,

தமிழக முதலமைச்சர் ஆட்சி பொறுபேற்ற பிறகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் கோரிக்கைகளுக்கு எப்போதும் செவிசாய்க்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்ற கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார். நீதித்துறையின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக தமிழக முதலமைச்சர் உள்ளார் என்றும் செய்யாறு பகுதியில் கூடுதலாக செசன்ஸ் நீதிமன்றம் வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். இந்த கோரிக்கையை நிச்சயமாக தமிழக முதலமைச்சர் ஏற்று கொள்வார் என்றும் நீதித்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது என்றும் பெருமிதமாக பேசினார்.

இன்றைக்கு பல்வேறு புதிய, புதிய வழக்குகள் உருவாகி உள்ளன.

அதனால் புதிய நீதிமன்றங்கள் தேவைப்படுகின்ற சூழ்நிலைகள் உருவாகி உள்ளது. தேவைகள் அதிகரித்து வரும் காரணத்தினால் சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றது. நிதி ஆதாரத்திற்கு ஏற்ப எவற்றிற்கு எல்லாம் முன்னுரிமை தேவைப்படுகின்றதோ அதற்கு ஏற்ப அந்த நீதிமன்றங்களை நாங்கள் நிச்சயமாக விரைந்து தொடங்குவோம். மேலும் தற்போது திறக்கப்பட்டு உள்ள நீதிமன்றங்கள் நிச்சயமாக இந்த பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார்.

தொடர்ந்து தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேசுகையில்,

மும்பையில் நீதிபதியாக பொறுப்பேற்ற பிறகு சீரடியில் உள்ள ஸ்ரீராம்பூர் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தேன். அதன்பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின்லைமை நீதிபதியாக பதவியேற்ற பிறகு திறந்து வைக்கின்ற முதல் நீதிமன்றம் திருவண்ணாமலையில் உள்ள இந்த இரண்டு நீதிமன்றங்கள் தான். நான் நீதிபதியாக பொறுப்பேற்ற பின் முதலில் திறந்து வைத்த 2 நீதிமன்றங்கள் உள்ள இடங்களும் புனிதமான இடங்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். செய்யாறு கூடுதல் நீதிமன்றமும், கீழ்பென்னாத்தூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றமும் பொதுமக்கள் மற்றும் வழக்காடிகளுக்கு பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. வழக்காடிகள் தங்களது வழக்கிற்காக பல கிலோமீட்டர் தூரம் இனி செல்ல வேண்டாம். நீதிமன்றங்கள் திறப்பதோடு மட்டும் பணி நிறைவடைந்ததாக கருத முடியாது. வழக்குகளை விரைவாக முடித்து பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் எதிர்பார்க்கும் நீதிபரிபாலனங்கள் உரிய நேரத்திலும், சரியான வகையில் நீதி கிடைப்பதே நீதிமன்றங்கள் திறப்பதற்கான உரிய நோக்கம். சமரச தீர்வு மையங்கள் குடும்ப நல வழக்குகளை தீர்த்து வைப்பதற்கு உதவுகிறது என்றும் அவர் பேசினார்.

What do you think?

ஐரோப்பா செய்திகள் | Europe News Tamil – 12.11.2024

காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி காட்டில் வீசிய கணவன் கைது…