மதுரை செல்லூர் பகுதியில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள கான்கிரீட் கால்வாய்க்கான பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் மூர்த்தி -செல்லூர் கண்மாய் தூர் வாரப்படுவது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என பேட்டி
மதுரையின் மையப் பகுதியாக இருக்கக்கூடிய மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லூர் கண்மாய் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெய்த கனமழை காரணமாக ஒவ்வொரு நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்காய் நிலையில் தேவர் ஜெயந்திக்காக மதுரைக்கு வந்த முதலமைச்சர் அவர்கள் விமான நிலையம் செல்வதற்கு முன்பு ஆய்வுக் கூட்டம் 30.10. 2024 அன்று நடத்தினார்
அந்த ஆய்வுக்கு கூட்டத்தில் செல்லூர் கண்மாயின் தற்போதைய நிலை மற்றும் ஆக்கிரமிப்பு உள்ள இடங்கள் குறித்து விளக்கப்பட்டது அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 11.90 லட்சங்களுக்கு ஒப்புதல் வழங்கினார்
குறிப்பாக செல்லூர் கண்மாய்க்கு அதிகப்படியான தண்ணீர் உள்வரவு வந்து உபரி நீராக வடிவமைக்கப்பட்ட அளவான 2513 கன அடி வினாடியை விட கூடுதலாக அதாவது 3603 கன அடி வினாடிக்கு வெளியேற்றப்பட்டுள்ளது
இந்தக் கண்மாயின் கழுத்தின் தண்ணீர் வெளியேற்றும் திறன் குறைவாக உள்ள காரணத்தினாலும் குறுகிய கால்வாயில் வெளியேற்றப்படுவதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்லக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டது
எனவே தற்போதைய வலது புறக்கடையில் அமைந்துள்ள தலை மதின் மூலம் 1090 கன அடி நீர் வினாடிக்கு வெளியேற்றும் வகையில் புதிதாக 290 மீட்டர் நீளத்திற்கு மூடிய கால்வாயாக அமைத்து வைகை ஆற்றல் சேர்க்கும் பணி திட்டமிடப்பட்ட நிலையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒப்புதல் வழங்கி அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்வதார்
இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் குடிநீர் பைப் மற்றும் கழிவுநீர் பைப்புகளை இடம் மாற்றம் செய்வதற்கு 315.95 லட்சங்களுக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதால் 11.90 லட்சங்களுக்கு பதிலாக 1510. லட்சங்களுக்கு மறு மதிப்பீடு செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது
இந்தத் திட்டத்தின் படி செல்லூர் கண்மாயில் புதிய ரெகுலேட்டர் தொட்டி மற்றும் 290 மீட்டர் நீளத்திற்கு சுரங்க கால்வாய் கட்டும் பணி ஆகியவைகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில்
இன்று அதற்கான பணிகளை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியாளர் மாநகராட்சி ஆணையாளர் மேயர் துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முடங்க சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு பணிகளை தொடங்கி வைத்தார்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்
மாண்புமிகு முதலமைச்சர் அவருடைய ஆணைக்கிணங்க இந்த பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது
இரண்டு மாதத்திற்குள் இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெறும்
தற்போது செல்லூர் கண்மாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது அவை நிறைவு பெற்ற பிறகு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்
நிச்சயமாக செல்லூர் கண்மாய் முதலமைச்சர அவர்களுடைய வழிகாட்டுதலின் பேரில் தூர்வாரப்படும் என்றார்