மதுரை மாவட்டம் பரவை அருகே சாதி சான்றிதழ் கேட்டு 5வது நாளாக 500க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே 1000க்கும்மேற்பட்ட பெற்றோர்கள் தொடர்காத்திருப்பு போராட்டம்
மாலை 4 மணிக்குள் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக எச்சரிக்கை
மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ளது சத்தியமூர்த்தி நகர். பரவை பேரூராட்சிக்குட்பட்ட இங்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படிக்கும் இவர்களது குழந்தைகளுக்கு இந்து காட்டுநாயக்கன் எனும் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கடந்த ஆண்டு வரை பெற்று வந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது பல்வேறு காரணங்களை கூறி மாவட்ட நிர்வாகம் இவர்களுக்கு இந்து காட்டுநாயக்கன் என்ற சான்றிதழ் தர மறுப்பதாக கூறப்படுகிறது
இதனால் தங்கள் குழந்தைகளுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் இந்து காட்டுநாயக்கன் சான்றிதழ் எனும் (ST) பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகில் இன்று 5வதுநாளாக வகுப்புகளை புறக்கணித்து 1000த்திற்கும்மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
சத்தியமூர்த்தி நகர் கிராம மந்தையில் போராட்டம் நடத்தி வந்த.அவர்கள்இன்று
மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகில் போராட்டம் நடத்தி வருகின்றனர்
மேலும் தங்கள் குழந்தைகளை வேட்டையாடும் பயிற்சி வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தங்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என தெரிவித்துள்ளனர்
தொடர்ந்து 5வது நாளாக தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் நடத்தி வரும் இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அனைவரும் வேட்டைக்கு செல்வர்கள் போல் வேடமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது