in

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களை அகற்றாமல், அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாக கூறி மற்றொரு பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தில் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களை அகற்றாமல், அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாக கூறி மற்றொரு பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தில் ஒரே பிரிவை சேர்ந்த மக்கள் கீழ்ப்பகுதி, மேல் பகுதி என இருவேறு தரப்பாக வசித்து வருகின்றனர். கடந்த 1953 ஆம் வருடம் கீழ்ப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக தனிநபர் ஒருவரிடம் இருந்து சுமார் 6 சென்ட் அளவுள்ள நிலம் கள்ள மாயன் வகையறா மூலம் பொது பயன்பாட்டுக்கு விலை கொடுத்து வாங்கியதாக தெரிகிறது.

அந்த நிலத்தில் கடந்த 1979 ஆம் வருடம் 2 வணிக கடைகள் மற்றும் ஐந்து வீடுகள் கட்டப்பட்டு இன்று வரை பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலத்தை யூ டி ஆர் சர்வே எனப்படும் நில அளவைத் துறையினர் கடந்த 1984 ஆம் வருடம் ஆய்வு செய்தபோது, புறம்போக்கு நிலம் என பதிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்தப் பதிவை ஆதாரமாகக் கொண்டு அக்கிராமத்தின் மேல் பகுதியில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை எதிர்த்து கள்ள மாயன் வகையறா மறு வழக்கு தொடர்ந்தனர். இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என்பதால் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அந்த இடத்தை அரசிடம் இருந்து கிரையம் பெற கள்ள மாயன் வகையறா முயன்று வருவதாக மேல் பகுதியினர் குற்றம் சாட்டினர்.

அரசு இடத்தை கிரையம் செய்து கொடுக்கும் பட்சத்தில் தவறான முன் உதாரணம் ஆகி விடும் என்பதால், இடத்தை கிரையம் செய்து வழங்காமல், ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி இன்று மேல் பகுதி மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.

What do you think?

மருது பாண்டியர்களின் வரலாற்றுக்கு ஆதாரமாகத் திகழும் பழமையான சத்திரத்தை தொல்லியல் துறை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும்

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் கடலூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி