திண்டுக்கல் அருகே பாதாள சிவலிங்கத்திற்கு அடியில் தோன்றிய நீர் ஊற்றால் பரபரப்பு.புனித நீரூற்றாக கருதி பாதாள சிவலிங்கத்தை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு புனித நீரை பெற்று செல்கின்றனர்.
திண்டுக்கல் அருகே அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்காம்பட்டி பகுதியில் வாஸ்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. அதில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 20 அடி ஆழத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர்.இந்நிலையில் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் சிவலிங்கத்திற்கு அடியில் நீரூற்று தோன்றி சிவலிங்கம் வழியாக வலிய துவங்கியது.
அந்த நீரானது பாதாள சிவலிங்கத்தை சுற்றி சுமார் ஒரு அடியிலிருந்து இரண்டு அடி வரை நீரூற்றிலிருந்து வெளியேறும் தண்ணீர் அறை முழுவதும் சிவலிங்கத்தை மறைக்கும் அளவிற்கு ஊற்று பெருக்கெடுக்க துவங்கியது. இதனைக் கண்ட பக்தர்கள் புனித நீராக கருதி அப்பகுதியில் நடைபெறும் கும்பாபிஷேகம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், உடலில் ஏற்படும் பல்வேறு வியாதிகளை போக்குவதாகவும்,வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள தீய சக்திகளை இந்த புனித நீர் தெளித்த உடன் விலகுவதாகவும் நம்பிக் கொண்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஊற்று பாதாள சிவலிங்கத்தை வழிபட ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 20 அடி ஆழத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் பொழுது இரண்டடி ஆழத்திற்கு காங்கிரீட் போடப்பட்டு பின்னர் அதன் மேல் டைல்ஸ் கல் பதிக்கப்பட்டு பின்னர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யப்பட்டது இந்நிலையில் ஆறு போல் ஊற்று பெருக்கெடுத்து வருவது மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாகவும் தற்போது புனித நீராக வழங்கப்பட்டு வரும் நிலையில் நோய் தீர்க்கும் மருந்தாக இந்த ஊற்று நீர் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.