பாம்பன் வடக்கு கடலில் இறங்கி போராட்டம் நடந்த முயன்ற இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் குடும்பத்தினரை தடுத்து நிறுத்திய போலீசார்:
பாம்பன் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நாட்டு படகையும் அதிலிருந்து 35 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை சிறை பிடித்து புத்தகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவர்களுக்கு ஏழு மாதங்கள் சிறை தண்டனை விதித்து வாரிய போலா சிறையில் அடைத்துள்ளனர்.
மீனவர்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு 100 நாட்களுக்கு மேலாக இலங்கை சிறையில் உள்ளதால் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று பாம்பன் சாலை பாலத்தில் விசைப்படகு மீனவர்களுடன் இணைந்து சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் மீனவர்களுடன் நடத்திய வார்த்தையை அடுத்து விசைப்படகு மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்ற நிலையில் நாட்டு படகு மீனவர்கள் கலைந்து செல்ல மறுத்து சாலையில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் சாலைகளில் ஈடுபட்டு வந்தனர்.
பின்ன நாட்டுப் படகு மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனையடுத்து சாலை பாலத்தில் இருந்து கலைந்து சென்ற மீனவர்களின் குடும்பத்தினர் “இலங்கைச் சிறையில் 100 நாட்களுக்கு மேல் உள்ள நாட்டுப்படகு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் குடும்பத்தினர் சாலை பாலத்திற்கு அருகே உள்ள பாம்பன் வடக்கு கடல் பகுதியில் இறங்கி போராட்டம் நடத்த முயன்று கடற்கரையை நோக்கி ஓடினர்.
இதனை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர் ஆனால் மீனவ பெண்கள் போலீசாரையும் தாண்டி கடலில் இறங்க முயன்றனர் இதனையடுத்து பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாம்பன் சாலை பாலம் அருகே நீண்ட போராட்டத்திற்கு பிறகு அழைத்து வந்தனர்.
மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யப்பட்டாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி மீனவ பெண்கள் கலைந்து சென்றனர்.
பாம்பன் சாலை பாலத்தில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவ பெண் ஒருவர் இதனை எடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அங்கிருந்து பாம்பன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.