in

செஞ்சி காந்தி பஜாரில் பேன்சி ஸ்டோரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

செஞ்சி காந்தி பஜாரில் பேன்சி ஸ்டோரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

ஒரு கோடி மதிப்பிலான பேன்சி பொருட்கள் எரிந்து நாசம் இரவு முழுவதும் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் ராஜி என்பவருக்கு சொந்தமான சுமங்கலி பேன்சி ஸ்டோர் இயங்கி வந்தது.

பெண்கள் ஆபரண நகைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடையில் இரவு 10 மணிக்கு உரிமையாளர் ராஜி கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் திடீரென கடையிலிருந்து கரும் புகை வெளியேறியதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செஞ்சி தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைக்க முற்பட்டனர் ஆனால் தீ கட்டுக்குள்
கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தீயணைப்பு வாகனம் தீயை அணைக்க வந்தபோது செஞ்சி காவல் நிலையம் எதிரே சாலை நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இரவு சுமார் 7:00 மணி நேரம் கட்டுக்கடாகாமல் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் கடையில் இருந்த சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலாகின.

செஞ்சி முக்கிய வீதியான காந்தி பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தால் செஞ்சி நகர் முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

What do you think?

நாமக்கல் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் ராஜகோபுரம் கட்டும் பணியினை கானொலி வாயிலாக துவக்கி வைத்த முதல்வர்

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா விடுதலை