சினிமா..வில் இருந்து விலகுகிறார்.. வாழ்க்கையே வீணா போய்டுச்சி… நடிகர் அமீர்கான் அதிரடி முடிவு
பிரபல இந்தி நடிகர் அமீர்கான் எப்போதுமே தனது படங்களில் வித்தியாசமான கெட்டப்புகளை ஏற்று அதற்காக தன்னை வருத்திக்கொண்டு உழைக்கும் ரகம். அமீர்கான் நடிப்பை தாண்டி தயாரிப்பு, இயக்க..இன்னு அசத்துபவர்.
தற்பொழுது சாய்பல்லவியை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்நிலையில் அமீர்கான் வெளியிட்ட ஒரு போஸ் ரசிகர்களை பெறும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகள் மட்டுமே நான் சினிமாவில் நிலைத்திருப்பேன் 10 வருடத்தில் ஏற்கனவே ஆறு படங்களில் ஒப்பந்தம் ஆகி விட்டேன். அதன் பிறகு சினிமா துறையில் இருந்து விலகுவேன்.
நான் Laal Singh Chaddha படத்தின் போதே ஓய்வு பெற முடிவு செய்தேன். கொரோனா சமயத்தில் ஒரு விஷயத்தை நான் உணர்ந்தேன், 18 வயது தொடங்கி இப்பொழுது வரை என்னுடைய இளமைக்காலம் முழுவதையும் நான் சினிமாவிலேயே செலுத்தி விட்டேன் எனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கைக்காக நேரம் செலவழிக்கவில்லை இரு மனைவி மற்றும் குழந்தைகளுடன் நான் நேரம் செலவிட்டதே இல்லை அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டதில்லை.
ஏனென்றால் சினிமாவில் சாதிக்க வேண்டும் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற வெறி மட்டுமே எனது குறிக்கோளாக இருந்தது. ஆனால் அது தவறு என்பதை கொரோனா காலம் எனக்கு உணர்த்தியது. குடும்பத்திற்காக நேரம் செலவழிக்காத தருணத்தில் நான் திருமணம் செய்திருக்க கூடாது. இப்ப நினைக்கும் பொழுதும் எனக்கு குற்ற உணர்வாக இருக்கிறது.
அதனால் இனி 10 வருட காலம் மட்டும் இருந்துவிட்டு அதற்கு பிறகு குடும்பத்துடன் மட்டுமே நேரத்தை செலவிட போகிறேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே இரண்டு திருமணம் பெயிலியரான நிலையில் மூன்றாவது திருமணம் செய்யும் எண்ணம் இருப்பதாகவும் தனக்கு ஒரு துணை வேண்டும் ஆனால் இந்த வயதில் திருமணம் செய்தால் அது நன்றாக இருக்குமா என்று தெரியவில்லை என்று அமீர்கான் அண்மையில் கேள்வி எழுப்பி உள்ளார்.
தற்பொழுதுதான் தன் குடும்பத்தின் உணர்வுகளை புரிந்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இவரின் இந்த உணர்வுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும். ஒரு சிலர் சினிமா…வை விட்டு விலக வேண்டாம் யோசித்து முடிவெடுங்கள் என்றும் அறிவுரை தந்திருகிறார்கள்.