திருவானைக்காவல் கோவிலில் குபேரலிங்கத்திற்கு அன்னாபிஷேகம்
பஞ்சப்பூத திருத்தலங்களில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் நீர்ஸ்தலமாகும். இங்கு ஓவ்வொரு ஐப்பசி பவுர்ணமி தோறும் குபேரலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படும்.
அன்னாபிஷேகத்தின் போது லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது என்றும் இதனை தரிசிப்பதால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 20 படி அரிசியால் சாதம் சமைத்து கோவிலின் தெற்கு கோபுரம் அருகில் உள்ள குபேரலிங்கத்திற்கு நேற்று மாலை அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் பஞ்ச பிரகாரத்தை சுற்றி கிரிவலம் வந்தனர்